×

வங்கி கடன் மோசடி வழக்கு சந்தா கோச்சர் வீடுகளில் சோதனை : அமலாக்கத் துறை அதிரடி

புதுடெல்லி : வங்கியில் கடன் பெற்று மோசடி செய்தது தொடர்பான வழக்கில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் சந்தா கோச்சர், வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை நடத்தியது. ஐசிஐசிஐ வங்கி தலைவராக சாந்தா கோச்சார் இருந்தபோது, ரூ.1,875 கோடி வங்கி பணத்தை வீடியோகான் நிறுவன தலைவர் வேணுகோபால் தூத்துக்கு கடனாக வழங்கியுள்ளார். இந்த கடனை பெற்ற சிறிது நாட்களில், கடனை வழங்கியதற்கு பிரதிபலனாக சாந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சாரின் நிறுவனத்தில் வீடியோகான் பல கோடி ரூபாயை முதலீடு செய்தது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த கடன் வழங்கியதில் நடந்த முறைகேடு, ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறையும் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சமீபத்தில் குற்றவழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், கடன் மோசடி வழக்கில் தொடர்புடைய முன்னாள் ஐசிஐசிஐ தலைவர் சாந்தா கோச்சார் மற்றும் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோரது வீடுகளில் நேற்று அமலாக்கத் துறையினர் போலீசார் உதவியுடன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அமலாக்கத்துறை விடுத்துள்ள அறிக்கையில்,` பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ஐசிஐசிஐ.ன் முன்னாள் தலைவர்  சாந்தா கோச்சார், வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோரின் மும்பை, அவுரங்காபாத் அலுவலகம் மற்றும் வீடுகள் என 5 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது’ என கூறப்பட்டுள்ளது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bank Debt Fraud Case , Kochar Homes Test,Implementation Department Action
× RELATED முதல்முறையாக 76,000 புள்ளிகளை கடந்த சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு